காமாட்சியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா!
ADDED :4119 days ago
திண்டிவனம்: திண்டிவனம் காமாட்சியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை நேற்று காலை நடந்தது. திண்டிவனத்தில் விஸ்வகர்ம சமூ கத்திற்கு சொந்தமான 300 ஆண்டுகள் பழமையான காமாட்சியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் புனரமைப்பு பணிகள் நிறைவடையும் தரு வாயில் உள்ளது. நேற்று காலை 9.30 மணி அளவில் 27 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. பூஜைகளை திருவண்ணாமலை சீனந்தல் மடம் சேகர் சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்தனர். பன்னீர்செல்வம், செல்வம், வீரராகவன், ஜெகதீசன், ஜானகிராமன், இள ங்கோ, முருகு, குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.