எட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
செஞ்சி: செஞ்சி தாலுகா நரசிங்கராயன் பேட்டை எட்டியாந்தாங்கல் ஏரிக்கரை கீழ் உள்ள எட்டியம்மன், மஹா சாஸ்தா கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. 1ம் தேதி காலை 10.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாகனம், எஜமான மகா சங்கல்பம், கோ பூஜை, புற்று ரூபத் தில் வீற்றிருக்கும் அன்னைக்கு விசேஷ பூஜை, கணபதி ஹோமம் செய்தனர். மாலை 4 மணிக்கு பிரவேச பலி, காப்பு கட்டுதல், யாக சாலை பூஜைகள் செய்தனர். இரவு மகா பூர்ணாஹூதியும், தீபாரா தனை, அஷ்டபந்தன மருத்து சாற்றுதலும் நடந்தது. நேற்று விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தன. 8.30 மணிக்கு பூர்ணாஹூதி, 9 மணிக்கு யாத்திராதானம், 9.15 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. 9.40 மணிக்கு எட்டியம்மனுக்கும், 9.45 மணிக்கு ஏனைய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை லலிதா செல்வாம்பிகை கோவில் ஈஸ்வரசிவன் தலைமையில் சிவாச் சாரியார்கள் செய்தனர்.