உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரிச்சந்திரன் கோவில் கும்பாபிஷேகம்!

அரிச்சந்திரன் கோவில் கும்பாபிஷேகம்!

திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் அரிச்சந்திரன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவெண்ணெய்நல்லூர்   மலட்டாற்றின் முகப்பில் இருந்த அரிச்சந்திரன் சிலையை சாலை விரிவாக்கம் செய்த போது  மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.  அருளாளர் சுந்தரர் அ  ருட்சபை சார்பில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிச்சந்திரனுக்கு புதிய கோவில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.  நேற்று காலை 7:30 மணிக்கு துவார சக்தி பூஜை, வேதிகா அர்ச்சனையும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை 9:25 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது.  காலை 10:00   மணிக்கு மூலவருக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. யாகபூஜைகளை விஜயகுமாரசுவாமிகள், அழகர்சிவம் செய்தனர். ஏற்பாடுகளை அருளாளர்   சுந்தரர் அருட்சபை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !