உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்!

பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்!

கடலூர்: ஆனி திருமஞ்சனத்தையொட்டி கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமான் ஆனந்ததாண்டவமாடியபடி, கோபுர தரிசனம் தந்த ஐதீகபெருவிழா நடந்தது.ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 6:30 மணிக்கு சிவகாமி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்புதிரவியங்களால் அபிஷேகமும், பெரியநாயகி சமேதபாடலீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைநடந்தது. தொடர்ந்து,உற்சவர் சிவகாமி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில், அலங்கார மண்டபத்தில்
ஆனந்த தாண்டவமாடியபடி கோபுர தரிசனம் தந்தார்.இந்த ஐதீக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டனர்.நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் நேற்று காலை11:00 மணிக்கு விநாயகர், நடராஜர், சிவகாம சுந்தரி
ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடராஜர்,சிவகாம சுந்தரியுடன் ஆலய உள் பிரகார உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் கோவிலைவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !