பவானி சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4112 days ago
பவானி: பவானி, மைலம்பாடி, கிருஷ்ணாபுரத்தில் உள்ள சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, மூன்றாம் தேதி இரவு விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை, 9.45 மணிக்கு மேல், 10.30 மணிக்குள், ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு, ஒலகடம் உலகேஸ்வரர் கோவில் சேகர் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின் சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பவானி யூனியன் தலைவர் தங்கவேலு, நகராட்சி தலைவர் கருப்பணன், ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கவுன்சிலர் வரதராஜ், மைலம்பாடி பஞ்சாயத்து தலைவர் சண்முகம், யூனியன் கவுன்சிலர் முருகன், விவசாய அணி செயலாளர் வாத்தியார் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது