பத்திரகாளியம்மன் கோவிலில் 13ம் தேதி கும்பாபிஷேகம்!
ADDED :4113 days ago
திருத்தணி : பத்திரகாளியம்மன் கோவிலில், வரும், 13ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருத்தணி அடுத்த, என்.என்.கண்டிகை கிராமத்தில், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 14ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா, இம்மாதம், 13ம் தேதி, காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.பகல், 1:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை பால்அபிஷேகம் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன.முன்னதாக, 11ம் தேதி பூ கரகம், 12ம் தேதி ஹோமம் நடக்கிறது.