வேம்புலி அம்மன் கோவிலில் நவகலச அபிஷேகம்!
ADDED :4113 days ago
திருவள்ளூர் : வேம்புலி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், நவகலச அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர், மேட்டுத் தெருவில், அமைந்துள்ள வேம்புலி அம்மன் கோவிலில், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, முதலாண்டு விழா மற்றும் வர்தந்தி உற்வசம், நவகலச அபிஷேகம் நடந்தது.இதையொட்டி, கோவில் வளாகத்தில், யாக குண்டம் அமைத்து, வேத விற்பன்னர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.