உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டாய வசூல்: பக்தர்கள் அதிருப்தி!

பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டாய வசூல்: பக்தர்கள் அதிருப்தி!

சிவகங்கை : சிவகங்கை,பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வாகனங்களில் வருவோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகங்கை, பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில், 60 வது ஆண்டு பூச்சொரிதல் விழா, ஜூலை 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய நாளான, ஜூலை 11 அன்று, காலை சிறப்பு பாலாபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், மாலை பூச்சொரிதல் விழா நடக்கும். அன்று, நகரில் உள்ள பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி, ஊர்வலமாக, கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு பூச்சொரிதல் செய்வர். இது தவிர, அன்றைய தினம், பொங்கல், மாவிளக்கு, பிள்ளைதொட்டி கட்டுதல், முடி இறக்கும் நேர்த்தி செய்வர்.

கட்டாய வசூல்: நகர் மட்டுமின்றி, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி கும்பிட செல்வர். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் டூவீலருக்கு ரூ.2, 3 சக்கர வண்டிக்கு ரூ.3, கார்களுக்கு ரூ.5 மட்டுமே வசூலிக்க, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், வாகன வசூலில் ஈடுபடுவோர், உத்தரவை மீறி, டூவீலருக்கு ரூ.10, மற்ற வாகனங்களுக்கு ரூ.20 வீதம் கட்டாய வசூல் செய்கின்றனர். தர மறுக்கும் பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. பக்தர்கள் அதிருப்தியுடன் கோயிலுக்கு செல்கின்றனர். கோயில் செயல் அலுவலர் ஆர்.இளையராஜா கூறுகையில்,"" அறநிலையத்துறை நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க கூறியுள்ளோம். கூடுதலாக வசூலிப்பது குறித்து, புகார் வந்தது. இதையடுத்து, கட்டணம் வசூலிப்பவரை கண்டித்துள்ளேன். இனிவரும் நாட்களில், கூடுதலாக வசூலிப்பது தடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !