உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயணி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!

நாராயணி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!

வேலூர்: வேலூர் நாராயணி கோவிலில், இன்று காலை கும்பாபிஷேகம் நடக்கிறது. வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், ஸ்ரீ நாராயணி அம்மன் கோவிலில், இரண்டாவது கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, சிறப்பு அம்சமாக, அம்மன் பீடத்தில், இரண்டரை கிலோ தங்கத்தால் ஆன சொர்ண பந்தனம் அமைக்கப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி பூஜை, கணப தி ஹோமம், கடந்த, 4ம் தேதி துவங்கியது. 5ம் தேதி துர்கா, லட்சுமி, சரஸ்வதி சிறப்பு ஹோமம், சாந்தி ஹோமம் மற்றும் ஆச்சார்ய பிரதஷ்ண ஊர்வலம் நடந்தது. 6ம் தேதி கால யாக பூஜை துவங்கி, மூன்றாவது கால யாக பூஜைகள் நேற்று முடிந்தது. யாக சாலை பூஜையை சக்தி அம்மா துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆறாம் கால யாக பூஜை, த்வார்ச்சனை, ஸ்பர்சாஹூதி, பூர்ணாஹூதி, தீபாரனைகள் நடந்தது. இன்று காலை, 9 மணி முதல், 10 மணிக்குள், நாராயணி அம்மன் கோவிலுக்கு, இரண்டாவது மகா கும்பாபிஷேகம் சக்தி அம்மா முன்னிலையில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !