சித்தலூர் கோவிலில் அடிப்படை வசதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு போதிய அடிப் படை வசதி எதுவும் இன்றி பக்தர்கள் கடும் அவதிக்காளாகின்றனர். ஆடி மாதம் துவங்கவுள்ளதால் குலதெய்வ வழிபாட்டிற்காக அம்மனை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருவார்கள். இவர்கள் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இன்றி மிகுந்த சிரமப்படும் நிலை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. அதேபோல் குடிநீர் வசதிக்காக கூடுதலாக குழாய் அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். போதிய மழை இன்றி அருகில் செல்லும் மணிமுக்தா ஆறு வறண்டு கிடப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கும், குடிநீருக்கும் அலையும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.