மகுடேஸ்வரர் கோவிலில் ஜூலை 11ல் கும்பாபிஷேகம்
ADDED :4113 days ago
குமாரபாளையம்: மங்களாம்பிகை, மகுடேஸ்வரர் கோவிலில், ஜூலை, 11ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. குமாரபாளையம் வாசுகி நகரில், மங்களாம்பிகை, மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததை தொடர்ந்து, ஜூலை, 11ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, நேற்று, மாலை, 5 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. இன்று யாகசாலை பூஜைகள் நடக்கிறது. ஜூலை, 11ம் தேதி காலை, 9.30 மணிக்கு, மங்களாம்பிகை மற்றும் மகுடேஸ்வரர் ஸ்வாமிக்கு கும்பாபிஷேக விழா கோலாகலாமாக நடக்கிறது.