ரிஷிவந்தியம் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா!
ADDED :4120 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் விழாவில் அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கும் முத்தாம் பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கும், சுயம்பு லிங்கத்திற்கும் சிறப்பு ÷ தனபிஷேகம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் அலங்கரித்து பெரிய பாலமூப்பர் வகையறாவினர் தலைமையில் கோவிலில் இருந்து புறப்பட்டது. கோவில் முன்பு ஜெயக்குமார் தலைமை யில் மண்டகப்படி நிகழ்ச்சியில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. சுவாமி சிலைகள் அலங்கரித்த தேரில் வைத்து பூ ஜைகள் நடந்தது. மாலை 4.20 மணிக்குப் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.