வைஷ்ணவ தேவி கோவிலுக்கு இன்று முதல் தினசரி ரயில்!
ADDED :4214 days ago
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு, ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள், புனித பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால், கோவிலின் அடிவாரத்தில் உள்ள கத்ராவுக்கு செல்வதற்கு, ரயில்போக்குரவரத்து வசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், ஜம்மு - காஷ்மீரின் உதாம்பூரிலிருந்து, கத்ராவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில், ரயில் போக்குவரத்தை, கடந்த வாரம் துவக்கி வைத்தார். இதையடுத்து, தலைநகர் டில்லியிலிருந்து, கத்ராவுக்கு தினசரி ரயில் போக்குவரத்து, இன்று முதல் இயக்கப்படுகிறது. டில்லியிலிருந்து, தினசரி மாலை புறப்பட்டு, மறுநாள் காலை கத்ராவுக்கு செல்லும்.