உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் இன்றுஆடித் திருவிழா கொடியேற்றம்!

ராமேஸ்வரம் கோயிலில் இன்றுஆடித் திருவிழா கொடியேற்றம்!

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், ஆடித்திருக் கல்யாண திருவிழா இன்று (ஜூலை 21) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதையொட்டி, ஜூலை 26 ல், ஆடி அமாவாசை அன்று இரவு சுவாமி, அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி, வீதி உலா நடைபெறும். விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. தேர் திருவிழாவிற்காக, துாசி படிந்த கோயில் வெள்ளி தேரை, பூ காப்பு, ரசாயன பவுடர் மூலம் கோயில் ஊழியர்கள், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !