உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பசியார் முருகன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்!

தென்பசியார் முருகன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்!

மயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் பால முருகன் கோவில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய்பொடி சிறப்பு அபிஷேகம் நடந்தது.தென்பசியார் வள்ளி, தெய்வானை, பால முருகன் கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. இரவு 9 மணிக்கு காப்புக் கட்டுதலும், இரவு 10 மணிக்கு சக்தி கலசம் புறப்பாடும், சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று 21ம் தேதி காலை 6 மணிக்கு கோவில் வளா கத்திலுள்ள வினாயகர் வள்ளி, தெய்வானை, பால முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு காலை 10 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது. காலை 11மணிக்கு தீமிதி விழா, செடல் உற்சவம், பகல் 12 மணிக்கு வள்ளி, தெய்வானை, பாலமுருகன் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !