ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை!
ADDED :4149 days ago
ராமநாதபுரம் :ராமநாதபுரம் அம்மன் கோயில்களில், ஆடி மாத இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அல்லிக்கண்மாய் மாரியம்மன், வெட்டுடையாள் காளியம்மன், சேதுபதி நகர் மல்லம்மாள் காளியம்மன், வாலாந்தரவை வாழவந்த அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். எண்ணெய் தீபமிட்டு பெண்கள் வழிபட்டனர். மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது.