மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4057 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4057 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4057 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் அணிவித்தனர்.பொங்கலிட்டு, முடி காணிக்கை அளித்து நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மாலை 5:00 மணியிலிருந்து பக்தர்கள் கூட்டம்அதிகரித்தது. இரவு 11:30 மணிக்கு, அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல்மண்டபத்தில் எழுந்தருளினார். ஊஞ்சல் தாலாட்டின் போது, அம்மன் தாலாட்டு மற்றும் பக்தி பாடல்களை பாடினர்.இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் குழு தலைவர் சரவணன், மேலாளர் முனியப்பன் மற்றும் அறங்காவலர்கள் மற்றும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4057 days ago
4057 days ago
4057 days ago