காமாட்சிபரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா!
ADDED :4090 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வேட்டையன்பட்டி காமாட்சிபரமேஸ்வரி அம்மன்கோயிலில், ஆடி திருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. அர்ச்சகர் பிரசன்னகுமார் தலைமையில் சிறப்பு பூஜை நடக்கிறது.இரவு 9 மணிக்கு அம்மன் எழுந் தருளல் நிகழ்ச்சி நடை பெறும். தினமும் பக்தர்கள் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபாடு நடத்தினர். வேட்டையன்பட்டி, மேல்மலை குடியிருப்பு, மாதவன் நகர், முத்துவடுகநாதர் நகர், காசியாபிள்ளை நகர், குறிஞ்சிநகர் மக்கள் கேழ்வரகு கம்பு மாவு கலந்த கூழ் அண்டாக்களில் தயாரித்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.