63 நாயன்மார் உற்சவர் சிலைகள் இன்று வருகை!
ADDED :4157 days ago
கரூர்: தமிழ் வழிபாட்டை வலியுறுத்தி, பேரூரில் இருந்து தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு, 63 நாயன்மார் உற்சவர் சிலைகளை, சிவனடியார்கள் ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். 63 நாயன்மார் உற்சவர் குழு, இன்று கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு காலை, 11 மணிக்கு வருகின்றனர். ஆன்மிக பக்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிபாடு செய்யலாம்தகவலை, கரூர் தமிழன்பர்கள் குழு சார்பாக, திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.