உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 600 மூலிகையால் தன்வந்திரியாகம்: பங்கேற்க அழைப்பு!

600 மூலிகையால் தன்வந்திரியாகம்: பங்கேற்க அழைப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ரமண மஹரிஷி முதியோர் இல்லத்தில், வரும், 30ம் தேதி, ஆரோக்கிய வாழ்விற்கான தன்வந்திரி யாகம் நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும், இலவசமாக கலந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கமலாபீட, ரமண மஹரிஷி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாவது: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ரமண மஹரிஷி முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இவ்வளாகத்தில் வரும், 30ம் தேதி, ஆரோக்கிய வாழ்விற்கான தன்வந்திரி யாகம், முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடக்கவுள்ளது. இதில், 600க்கும் மேற்பட்ட மூலிகைகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் வகையில், பிரம்மாண்ட முறையில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, தன்வந்திரி யாகம் நடத்தப்பட உள்ளது. மேலும், கமலா பீடம் சார்பில், 300க்கும் மேற்பட்ட பெண்கள், மாலை அணிவித்து, விரதமிருந்து தன்வந்திரி யாகத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள மூலிகைகளை இருமுடி கட்டி தலையில் சுமந்து எடுத்து வரும் மூலிகைகள், யாகத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த யாகத்தில், பொதுமக்கள், இலவசமாக கலந்து பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கமலாபீடம் சார்பில், நிறுவனர் சீனுவாசன் மற்றும் ரமண மஹரிஷி முதியோர் இல்ல நிர்வாகி வரலட்சுமி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !