உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருகாவூரில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்!

விருகாவூரில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்!

கள்ளக்குறிச்சி : விருகாவூரில் சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் 30ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் சர்க்கரை விநாயகர், சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், சிவசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 12ம் தேதி நடந்தது. 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்து, மண்டலாபிஷேக நிறைவு விழா 30ம் தேதி நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்கு கோ பூஜை, கணபதி, நவக்கிரகம்,சுதர்சனம், மகாலஷ்மி யாகங்கள் நடக்கிறது. மகாபூர்ணாகுதி யாகத்தில் சேர்த்த பின் கலசாபிஷேகம் செய்கின்றனர். மாலை 4:00 மணிக்கு சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம், சிவசக்தி அம்மனுக்கு மாங்கல்யம் சாற்றுதல், அதனைத் தொடர்ந்து வீதியுலா உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !