உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை!

முத்துமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை!

ரிஷிவந்தியம்: கீழ்பாடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் ஒன்றியம் கீழ்பாடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி மண்டல பூஜையின் 48 வது நாளான நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக யாகங்கள் வளர்க்கப்பட்டு, 108 சங்காபிஷேகங்கள் மூலம் மண்டல பூஜை நடந்தது. பக்தர்கள் 1008 பால்குடங்கள் மற்றும் மடிப்பிச்சை போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.  பூஜை ஏற்பாடுகளை  ரவிச்சந்திரசிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !