உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரி செல்லியம்மன் கோவில் திருவிழா!

அர்த்தநாரி செல்லியம்மன் கோவில் திருவிழா!

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாப்பனப்பட்டு அர்த்தநாரி செல்லியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு சேத்தியாத்தோப்பு சேகர் குழுவினரின் அரிசந்திரா மேடை நாடகம் நடந்து வந்தது. 25ம் தேதி நடந்த சாகை ஊற்றும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 26ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், கிராம நிர்வாகிகள் பார்த்தசாரதி, ஜோதிமாணிக்கம், சிவக்குமார், ஊராட்சி  தலைவர் கரும்பாயி வீரப்பன்,  துணைத் தலைவர் சுதாகர், திருசங்கு, மருதுõர் விஸ்வநாதன், கலியபெருமாள், ராயர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !