உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆடித்திருவிழா ஆக., 4 ல் துவக்கம்!

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆடித்திருவிழா ஆக., 4 ல் துவக்கம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் ஆடித்திருவிழா ஆக., 4 ல் துவங்குகிறது. திருவிழா துவங்கும் தினத்தில், இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு, தீபாராதணை, 10:00 மணிக்கு வில்லிசை நடக்கிறது. ஆக., 5 ல் காலை 7:30 மற்றும் 8:30 க்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. 10:00 மணிக்கு கும்பம் திருவீதி உலா, பகல் 12:00 க்கு பக்தர்களுக்கு அன்னதானம், மாலை 5:00 மற்றும், இரவு 7:00 க்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11:00 க்கு கும்பம் திருவீதி உலா நடைபெறுகிறது. ஆக., 6 ல் காலை 7:00 மணிக்கு கும்பம் திருவீதி உலா, அம்மனுக்கு சிறப்பு மகுடம், பகல் 12:00க்கு பக்தர்களுக்கு அன்னதானம், மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !