ஸ்ரீபுற்று நாகஅம்மன் கோவிலில் நாகபஞ்சமி 108 சங்காபிஷேகம் !
சென்னிமலை: கவுண்டிச்சிபாளையத்தில் ஸ்ரீபுற்று நாகஅம்மன் கோவிலில், ஆடி வெள்ளி மற்றும் நாகபஞ்சமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடும், சங்காபிஷேக பூஜையும் நடந்தது.ஆடி மாதத்தில், அம்மன் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கும். இதில், நாகதேவி பூஜை என அழைக்கப்படும் சர்ப வழிபாடும், பெண்ணிகளிடம் அதிகரித்து வருகிறது. ஆதி சேஷன் என்ற நாகத்தின் மீது தான், நாராயணன் பள்ளி கொண்டுள்ளார். முருகனின் காலடியில், படம் எடுத்த நிலையிலும், சிவபெருமான் கழுத்திலும், விநாயகர் பக்கத்தில் நாகர் சிலையாகவும் அமைந்திருக்கும்.ஜாதக அமைப்பில், தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்களில், ராகு, கேதுவாகும். நாக தோஷம் இருந்தால், திருமண தடைகள், குழந்தை பாக்கியம் இன்மை, தொழிலில், குடும்பத்தில், பல இன்னல்கள் வருகின்றன. இந்த துன்பங்களில் இருந்து மீள, நாகஅம்மன் வழிபாடு பிரதானமாகும்.இதன்படி, சென்னிமலை, ஈரோடு மெயின் ரோடு, கவுண்டிச்சிபாளையம் அருகே, எல்.பி.பி., வாய்க்கால் கரையில் அமைந்துள்ளது, ஸ்ரீபுற்று நாகஅம்மன் கோவில். இங்கு, பெரிய புற்று உள்ளது. இக்கோவிலை வழிபட, பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வருகை புரிகின்றனர்.நேற்று, ஆடி வெள்ளி மற்றும் நா க பஞ்சமி பெருவிழா, சங்காபிஷேத்துடன் நடந்தது. காலையில், யாகவேள்வி பூஜையுடன், விழா து வங்கியது. தொடர்ந்து, 108 சாங்காபிஷேகம், நாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நாக புற்றுக்கு பாலாபிஷேம் உட்பட, வேள்வி பூஜை நட ந்தது. மதியம் தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடந்தது