உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணக்கன்குப்பம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா!

கணக்கன்குப்பம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா!

செஞ்சி : கணக்கன்குப்பம் முனீஸ்வரன், அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் கிராமத்தில் கருவாட்சியார் மாந்தோப்பில் உள்ள முனீஸ்வரன், அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 2ம் தேதி மாலை 6 மணிக்கு தேவதானறுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளும், இரவு விக்ரகங்கள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜைகளும், சகல தேவதா அஷ்டோத்ர கதம்ப நாமாவலி பாராயணம், மூலமந்திர ஜபம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 9 மணிக்கு அய்யனாரப்பன், முனீஸ்வரன், சப்த கன்னிகைகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் 9.30 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சந்தானம் மற்றும் கிராம பொது மக்கள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !