உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைமருதூர் பாண்டி முனீஸ்வரர் கோயில் பால் குட திருவிழா!

திருவிடைமருதூர் பாண்டி முனீஸ்வரர் கோயில் பால் குட திருவிழா!

திருவாடானை தாலுகா திருவிடைமருதூர் கிராமத்தில் உள்ளது பாண்டி முனீஸ்வரர் கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆடிமாதம் பால் குடத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 24-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.முன்னதாக பக்தர்கள் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் இருந்து பால் குடம் ஏந்தியும், பாண்டி அய்யா வேடமணிந்தும் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.திருவிடைமருதூர் பாண்டிமுனீஸ்வரர் கோயிலை அடைந்து தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அன்னதானமும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !