மங்கள விநாயகர் திருக்கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு!
ADDED :4100 days ago
கவுண்டம்பாளையம், சிவநகரில் உள்ள ஸ்ரீ மங்கள விநாயகர் திருக்கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 108 திருவிளக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.கோவில் தலைவர் சக்கரவர்த்தி விஜயகுமார் முன்னிலை வகித்தார். செஞ்சேரிமலை முத்துசிவராம சுவாமிகள் தலைமை வகித்தார். திலகவதி சண்முகசுந்தரம் தொடங்கிவைத்து சொற்பொழிவாற்றினார். பின்னர் திருவிளக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குழுவினர் செய்திருந்தனர்.