கொண்டிராஜபாளையத்தில் யோகநரசிம்மர் கோவில் சந்தனக்காப்பு விழா!
ADDED :4094 days ago
தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட யோகநரசிம்மர் கோவிலில் 96–ம் ஆண்டு சந்தனக்காப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி யோகநரசிம்மர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை ஆண்டாள் திருப்பேரவை தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ராஜா, பொருளாளர் தியாகராஜகுருக்கள், துணை செயலாளர்கள் முத்துராஜ், சீனிவாசன், கணேசமூர்த்தி, ஸ்ரீதர், சீதாராமன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். கோவில் அர்ச்சகர் சீனிவாசபட்டாச்சாரியார் அலங்கார ஆராதனை மற்றும் அபிசேகத்தை நடத்தினார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.