உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீராம்பட்டினம் கோவிலில் ஆடிப்பெருவிழா இன்று துவக்கம்!

வீராம்பட்டினம் கோவிலில் ஆடிப்பெருவிழா இன்று துவக்கம்!

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், ஆடிப்பெரு விழா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழா உற்சவம் இன்று 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, நேற்று மாலை 6.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இன்று காலை 4.௦௦ மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான திருத்தேர் உற்சவம், வரும் 15ம் தேதி நடக்கிறது. 16ம் தேதி இரவு 9 மணிக்கு தெப்பல் உற்சவம், 22ம் தேதி இரவு 9.௦௦ மணிக்கு முத்துப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !