உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கடைசி வெள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜை

ஆடி கடைசி வெள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜை

ஆனைமலை : ஆனைமலை அடுத்துள்ள பொங்காளியூர் கமல காமாட்சியம்மன் கோவிலில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. ஆனைமலையை அடுத்துள்ள மலையாண்டிப்பட்டணம், பொங்காளியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கமல காமாட்சியம்மன் கோவிலில் ஆடிமாதம் ஐந்து வெள்ளிக்கிழமைகளும் அம்மனுக்கு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் செய்து புத்தாடை அணிந்து அலங்கரிப்பது வழக்கம். நாளை ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு 27 அபிேஷக பொருட்கள் மற்றும் பக்தர்கள் கொண்டு வரும் பசும்பால், மற்றும் பூஜை பொருட்களை கொண்டு அம்மனுக்கு அபிேஷகம் நடைபெறுகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், மாவிளக்கும் எடுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !