வீரமாகாளி அம்மன் கோயில் முளைப்பாரி!
ADDED :4149 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நீலகண்டன் சந்து வீரமாகாளி அம்மன் கோயில் முளைப்பாரி ஆக., 8ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. திருவிளக்கு பூஜை நடந்தது. ஆக., 10ல் அம்மன் கரகம் புறப்பட்டு ஊர்வலமாக வந்தது. ஆக.,11ல் புஷ்ப பல்லக்கில் அம்மன் அலங்காரம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் சென்ற கரகம் ஊரணியில் கரைக்கப்பட்டது. நேற்று(ஆக.,12) காலை காப்பு அவிழ்க்கப்பட்டு, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.