உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடியில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா; நாளை நடக்கிறது

இருக்கன்குடியில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா; நாளை நடக்கிறது

சாத்தூர் : இருக்கன்குடிமாரியம்மன் கோயில் ஆடிகடைசி வெள்ளி பெருந்திருவிழா, நாளை(ஆக.,15) நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். இங்கு இத்திருவிழா ஆக.,8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இங்கு வருகை பக்தர்கள் பொங்கலிட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் அம்மனை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான, ஆடி கடைசி வெள்ளிப்பெருந்திருவிழா, நாளை நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு அம்மன் நகர்வலம் வருதல் துவங்குகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். பக்தர்களின் வசதிக்காக, முக்கிய நகரங்களில் இருந்து இருக்கன்குடிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !