உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சாதிக்கும் மாதம்!

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சாதிக்கும் மாதம்!

கடமையுணர்வுடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே!

ராசிநாதனான குரு தற்போது 5 ல் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை
சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் சாதனை புரிவீர்கள். ராசிக்கு 6 ல் சூரியன் சஞ்சரிப்பதால் பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும்.  உத்தியோகத்தில் கவுரவத்துடன் திகழ்வீர்கள். சமூகத்தில் மதிப்பு கூடும். ஆரோக்கியம் மேம்படும்.  புதனால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். சிலர் பதவி உயர்வு காண்பர். புதன் ஆக. 26ல் 7-ம் இடமான கன்னிக்குச் செல்வதால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். செவ்வாய் தொடக்கத்தில் 8 ல் இருப்பதால்  உடல் உபாதை உருவாகும். ஆனால் செப். 1ல் அவர் 9-ம் இடம் செல்வதால் பொருள் நஷ்டம் வரலாம்.  சுக்கிரன் செப். 1 வரை சாதகமான இடத்தில் இருக்கிறார். அவரால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.திருமணம் ஆகாதவர்களுக்கு மணப் பொருத்தம் கை கூடும். கணவன்- மனைவி இடையேஅன்பு நீடிக்கும். ஆனால்ஆக. 26க்கு பிறகு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். ஆக. 26க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். புதனின் அருளால் சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர்.

கலைஞர்கள் சிறப்பான பலனைக் காணலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். ஆனால் ஆக.26 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு பெறவும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.

பெண்கள் குடும்பத்தினரால் போற்றப்படுவர். ஆக. 26க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

நல்ல நாள்: ஆக. 18,19,25,26,27,28,29, செப். 4,5,6,7, 10,11, 14,15,16

கவன நாள்: ஆக. 30,31 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,9               நிறம்: மஞ்சள், செந்துõரம்

வழிபாடு: வெள்ளியன்று லட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தினமும் சூரிய வழிபாடு நடத்துங்கள். குல  தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !