ராமானுஜ நாவலர் மன்றம் சார்பில் 36ம் ஆண்டு வைணவ மாநாடு
புதுச்சேரி: புதுச்சேரி சித்தன்குடியிலுள்ள ஜெயராம் திருமண நிலையத்தில், ராமானுஜ நாவலர் சுவாமிகள் மன்றத்தின் சார்பில், 36வது ஆண்டு வைணவ மாநாடு நேற்று நடந்தது. புதுச்சேரி விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி நிறுவனர் ஜனார்த்தன ராமானுஜதாசர், கருடக் கொடியை ஏற்றினார். மன்றத் தலைவர் ஆனந்தரங்க ரவிச்சந்தர் வரவேற்றார். திருக்கோவிலுார் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாசாரியார் தலைமை தாங்கி பேசினார். மாநாட்டில், மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் என்ற தலைப்பில் திருச்சித்தரக்கூடம் அரங்காசாரியார் சுவாமியும், பரகாலன் பைந்தமிழ் என்ற தலைப்பில் பராசர பத்ரி நாராயண பட்டர் சுவாமியும், ராமானுஜர் ஆயிரம் என்ற தலைப்பில் சதுர்வேதி பிரசன்ன வேங்கடாசாரியார் சுவாமியும் சொற்பொழிவாற்றினர். மாலை நடந்த நிகழ்ச்சியில், அமலன் ஆதிப்பிரான் என்ற தலைப்பில் மஞ்சுளாவும், விண்ணகரங்களில் திருப்பதியம் விண்ணப்பித்தல் என்ற தலைப்பில் வேங்கடேசனும், கருணைக்கடல் என்ற தலைப்பில் ரகுராமானுஜதாசரும், திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்ற தலைப்பில் ஆஷாவும், திருப்பாவையும்-அர்ச்சாவதாரமும் என்ற தலைப்பில் ராஜஅம்சம் சுவாமிகளும், கீதையும் நாமும் என்ற தலைப்பில் அரவிந்தலோசனனும் சொற்பொழிவாற்றினர். மன்ற நிர்வாகிகள் அரங்கசாமி, அரிகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ராமச்சந்திர தேசிகதாசன், கோசதன், கணஷே் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.