உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வி.புதூர் ஐயப்பன் கோயில் நடைதிறப்பு!

வி.புதூர் ஐயப்பன் கோயில் நடைதிறப்பு!

ராஜபாளையம்: சத்திரப்பட்டி அருகே வி.புதூரில், தமிழ்மாத பிறப்பை முன்னிட்டு, ஐயப்பசுவாமி கோயில் நடைதிறப்பு நேற்று நடந்தது. அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. சபரிமலை ஐயப்பசுவாமி கோயில் அமைப்பில், கீழராஜகுலராமன் வி.புதூரில் ஐயப்பசுவாமி கோயில் உள்ளது. தமிழ்மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம், கணபதி ஹோமம், கலச பூஜை நடந்தன. 9 மணிக்கு நெய் அபிஷேகம், 12.30 மணிக்கு உச்சிகால பூஜை முடிந்து, நடைசாத்தப்பட்டது. பின் மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, புஷ்பாபிஷேகம், படி பூஜை, கணபதி ஹோமம் நடந்தன. இரவு 10 மணிக்கு, சுவாமியை தியானகோலத்தில் அமர்த்தி, நடை சாத்தப்பட்டது. பக்தர்களுக்கு அரவணை, அப்பம், இலை பிரசாதம், பால் பாயாசம் வழங்கப்பட்டது. சபரிமலை தந்திரி பரம்பரையை சேர்ந்த ராஜூ மகாதேவன் நம்பூதிரி பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை, வி.புதூர் தர்மசாஸ்தா ஐயப்ப பக்த அன்னதான சேவா சங்கம், ஊர் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !