அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி வழிபாடு
ADDED :4127 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், கடைசி ஆடி வெள்ளியையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலில், தெற்கு முகமாக அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு, ராகு காலத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பெண்கள் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டனர். தோப்புத்துறை வனத்துர்க்கையம்மன் கோவில், அங்காளம்மன்கோவில் பக்தர்குளம் மாரியம்மன் கோவில்களில், ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா. வேதாரண்யம் அடுத்த, கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு, பால்காவடி எடுத்து, நேர்த்திக்கடனை செலுத்தினர்.