வடபாதி செல்லியம்மன் கோவில் தீமிதி திருவிழா!
விடையூர் : விடையூர் வடபாதி செல்லியம்மன் கோவிலில், 40ம் ஆண்டு, தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட விடையூர் கிராமத்தில் அமைந்துள்ளது வடபாதி செல்லியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், 40ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக, கடந்த 8ம் தேதி, காப்பு கட்டி தீமிதி திருவிழா நடந்தது. தினமும் மாலையில் அம்மன் மலர் அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா, நேற்று முன்தினம், நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தினர். அதன்பின், கோவில் அருகே அமைந்துள்ள கொல்லாபுரி அம்மன், செல்லியம்மன் மற்றும் வடபாதி செல்லியம்மன் ஆகிய மூன்று அம்மன்கள் மலர் அலங்காரத்தில், திருவீதி உலா நடந்தது.விடையூர் கிராமத்தைச் சுற்றியுள்ள கலியனுார், மணவூர், கடம்பத்துார், வெண்மணம்புதுார் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.