எட்டியம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா!
ADDED :4122 days ago
செஞ்சி: நரசிங்கராயன் பேட்டை எட்டியம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. செஞ்சி தாலுகா நரசிங்கராயன் பேட்டை எட்டிய õந்தாங்கல் ஏரிக்கரை கீழ் உள்ள எட்டியம்மன், மஹா சாஸ்தா கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 2ம் தேதி நடந்தது. 48 நாள் மண்டலாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. காலை 11 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜைகள் செய்தனர். பகல் 2 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. கலச நீர் கொண்டு எட்டியம்மனுக்கும், மகா சாஸ்தா மற்றும் ஏனைய தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது. பூஜைகளை லலிதா செல்வாம்பிகை கோவில் ஈஸ்வர சி வன் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.