ஆண்டாள் கோயில் மரங்கள் அகற்றம்!
ADDED :4074 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஆண்டாள் கோயில் நந்தவனத்தில் பூ செடிகளும், மரங்களும் இருந்தன. 30 அடி உயரத்தில் வளர்ந்த நிலையில், அசோக மரங்களும் இருந்தன.அசோக மரங்களில் வவ்வால்கள் அதிகளவில் இருந்தன. இதனால் நந்தவன ஆண்டாள் சன்னதிக்கு வரும் பாதையில், வவ்வால்களின் எச்சங்கள் விழுந்து நாசம் செய்து வந்தன. சில நேரங்களில் எச்சங்கள் பக்தர்களின் மேல் விழுந்தும் வந்தன. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நந்தவனத்தில் நின்ற மூன்று அசோக மரங்களும், வெளியில் நின்ற நான்கு மரங்களும் வெட்டபட்டன.கோயில் செயல் அலுவலர் ராமராஜா,"" மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட பகுதியில் வேறு மரக்கன்றுகள் நடப்படவுள்ளன,என்றார்.