மயிலம் மகா கும்பாபிஷேகம்!
ADDED :4073 days ago
மயிலம்: செண்டூர், மயிலம் ரோட்டிலுள்ள பாவம் தீர்த்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. 19ம் தேதி மாலை 5 மணிக்கு முதல் யாக சாலை, விநாயகர் வழிபாடு நடந்தது. இரவு 8 மணிக்கு நாடி சந்தானம், வழிபாடு நடந்தது. 20ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு, தொடர்ந்து யாக சாலையிலிருந்து திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10 மணிக்கு கலசத்திற்கு மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகத்தை நடத்தினார். மாவட்ட கவுன்சிலர் நடராஜன், மயிலம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் மலர் மன்னன் உட்படபலர் சுவாமி தரிசனம் செய்தனர்.