உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் கோயில் விநாயகர் சதுர்த்திவிழா

ராஜபாளையம் கோயில் விநாயகர் சதுர்த்திவிழா

ராஜபாளையம் : ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில், ஆக. 24ல், விநாயகர் சதுர்த்திவிழா துவங்கி, ஆக. 29ல் புதியாதிகுளம் கண்மாயில் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளன. முதல்நாள் நிகழ்ச்சியாக, உலகநன்மை வேண்டி செந்தமிழ் மந்திர சிவயோக வேள்வி நடக்கிறது. பின், சாய் பஜன், இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆக. 25ல் யோகசாசனம், பரதநாட்டியம், ஆக. 26ல் தெய்வீக அன்னதானம், பட்டி மன்றம், 27ல் தெய்வமும் மனிதனும் சொற்பொழிவு, உலகுக்கு வழிகாட்டும் தமிழ்பண்பாடு சிறப்புரை, பரதநாட்டியம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சி நடக்க உள்ளன. ஆக., 28ல் சீர்வரிசைகளுடன் இலவச திருமணம், நாம சங்கீர்த்தனம் பஜனை நடைபெற உள்ளது. 29ல் சிறப்பு ஹோமம், அறுசுவை சதுர்த்தி அன்னதானம், மாலை 6 மணிக்கு விநாயகர்சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலத்தில், விஸ்வரூப ரதத்தில் விநாயகர், கோலாட்ட கணபதி மற்றும் முருகன், அன்னப்பறவை வாகன கணபதி, மீன் அவதாரத்தில் விநாயகர், சிங்கரதத்தில் விநாயகர் போன்ற சிலைகள் வர உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !