உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்

ரெட்டியார்சத்திரம்: கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வழுக்குமரம் ஏறினர். ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா, ஆக., 15 ல் உறிமரம் நடுதலுடன் துவங்கியது. ஆக., 19 ல், சிறப்பு பூஜைகளுக்குப்பின், கோபிநாதசுவாமி உற்சவர் மலையிலிருந்து புறப்பாடு நடந்தது. மூன்று நாட்களாக, இராமலிங்கம்பட்டி, கட்டச்சின்னான்பட்டி, எல்லைப்பட்டி, எர்ணம்பட்டி, முத்துராம்பட்டி, குளத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, தோப்புப்பட்டி, எஸ்.வாடிப்பட்டி, அய்யம்பட்டி கிராமங்களில், ஊர்வலம் நடந்தது.நேற்று மாலை, கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலை அடைந்தது. கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கோயில் முன்புறம், விசேஷ பூஜைக்குப்பின், கோயில் முன்புறம் 40 அடிஉயர வழுக்குமரம் ஊன்றப்பட்டது. வேலம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன், வழுக்குமரம் ஏறினர். ஒன்றரை மணிநேர முயற்சிக்குப்பின், தினேஷ்குமார், 22, வழுக்குமர உச்சியில் இருந்த பரிசுமுடிச்சை அவிழ்த்தார். பின், தயிர், வெண்ணெய் கலயங்களைக்கொண்ட உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !