முத்துமாரியம்மன் கோவில் திருவிழா!
ADDED :4064 days ago
தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சிறுவல் காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன் தினம் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. கஞ்சி கலயத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோவிலில் வைத்த பெரிய கொப்பரையில் கூழ் வார்த்து வழிபாடு நடத்தினர். கோவில் வாளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு தீபம் ஏற்றியும் பெண்கள் பூஜை செய்தனர். மாரியம்மன் சிலையை தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். ஊராட்சி தலைவர் மணிவண்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.