புனித தெரசாள் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
ADDED :4064 days ago
சின்னசேலம்: சின்னசேலம் புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. சின்னசேலம் புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பங்குதந்தை மைக்கேல் ஜான் கொடியேற்றினார். தினம் தேர்பவனி, திருப்பலி, மறையுரை நடக்கும். வரும் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. பங்குதந்தை பால்ராஜ், அருட்சகோதரிகள், விழாக் குழுவினர் மற்றும் பங்கு மக்கள் கலந்துக்கொண்டனர் . விழா ஏற்பாடுகளை பங்குதந்தை லூர்து ஜெயசீலன் செய்தார்.