விளாச்சேரி ராமர் கோயிலில் மண்டலாபிஷேக விழா!
ADDED :4064 days ago
மதுரை: திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள 700 ஆண்டு பழமையான பட்டாபி ஷேக ராமர் கோயிலில் மண்டலாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கடைசியாக 1903ல் கும்பாபிஷேகம் நடந்துள்ள இக்கோயிலுக்கு, சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை தொடர்ந்து இன்று மண்டலாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சிவராம், திருப்பணிக்குழுத்தலைவர் மரகதவல்லி, பொருளாளர் சங்கர நாராயணன், செயலாளர் கண்ணன் செய்துள்ளனர்.
தொடர்புக்கு: 97888 54854.