உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு ஆஞ்சநேயர் ஆரத்தி!

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆஞ்சநேயர் ஆரத்தி!

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஆஞ்சநேயர் சுவாமி ஆரத்தி அளிக்க, தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.திருமலை ஏழுமலையானுக்கு, அடுத்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. அதில், ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள, பேடி ஆஞ்சநேயர் சுவாமி உற்சவ மூர்த்திக்கு ஆரத்தி அளிக்க, ஆகம பண்டிதர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏழுமலையான் கோவில் அக்னி மூலையில் உள்ள, கொலு மண்டபத்தை (சஹஸ்ர தீப அலங்கார சேவை நடத்தும் இடம்) 100 மீட்டர் தள்ளி அமைத்துள்ளனர். இதையடுத்து, கோவில் முன் இருந்த, மூத்த குடிமக்கள் காத்திருப்பு வரிசையை, தெற்கு மாடவீதியில் மாற்ற உள்ளனர். இதனால், கோவில் முன் விசாலமான இடம் கிடைக்கும். பிரம்மோற்சவ சமயத்தில், மாலை ஊஞ்சல் சேவை நடைபெற்ற பின், வாகன சேவை நடத்த உற்சவ மூர்த்திகள் வாகன மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுவர். அப்போது, உற்சவ மூர்த்திகளுக்கு பேடி ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள அகண்டம் முன், ஆரத்தி அளிக்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்காக, வைகானச ஆகம பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த ஆண்டு இதே போல், வைகானச ஆகம பண்டிதர்களுடன் ஆலோசித்து, திருமலையில் உள்ள புஷ்கரணியில், தினமும் மாலை வேளையில், தேவஸ்தானம் ஆரத்தி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !