உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை பிஷப் பதவியேற்பு!

மதுரை பிஷப் பதவியேற்பு!

மதுரை: மதுரை உயர்மறை மாவட்ட 6வது பிஷப் அந்தோணி பாப்புசாமி நேற்று பதவியேற்றார். பிஷப் பதவி வகித்த பீட்டர் பெர்னாண்டோ ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்தோணி பாப்புசாமியை, போப் ஆண்டவர் பிரான்சிஸ் நியமித்தார்.நேற்று மதுரை ஞானஒளிவுபுரம் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வத்தோரே பென்னாக்கியோ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக, கேரளா பிஷப்கள், பாதிரியார்கள் பங்கேற்றனர்.வாழ்க்கை குறிப்பு பிஷப் அந்தோணி பாப்புசாமி, திண்டுக்கல் மாரம்பாடி கிராமத்தில் 1949 அக்.,1ல் பிறந்தார். திருச்சியில் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து 1976ல் குரு பட்டம் பெற்றார். 1984ல் ரோம் நகரில் ஜான் லாத்ரன் பல்கலையில் இறையியல் முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும், புனித தாமஸ் அக்குவீனாஸ் பல்கலையில் ஆன்மிக டிப்ளமோ பட்டமும் பெற்றார். 1985 -98 வரை திருச்சி மறைமாவட்ட பொறுப்புகளில் பணியாற்றினார். 1998ல் துணை ஆயராக பதவி உயர்த்தப்பட்டு 2003 வரை மதுரை உயர் மறைமாவட்டத்தில் பணியாற்றினார். பின், திண்டுக்கல் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் பணியாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !