உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக சிலைக்கு சோமவார அமாவாசை சிறப்பு பூஜை!

நாக சிலைக்கு சோமவார அமாவாசை சிறப்பு பூஜை!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சோமவார அமாவாசையில், நேற்று, நாக சிலைக்கு பூஜை செய்து, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வர் கோவில் அரச மரத்தடியில், 100க்கும் மேற்பட்ட நாக சிலைகள் உள்ளன. இங்கு, நாகபஞ்சமி அன்று நாக தோஷம் நீங்க, கல்யாண தடை நீங்க, குழந்தை பேறு கிடைக்க, பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.இதேபோல், திங்கட்கிழமை வரும் அமாவாசையன்றும், இவ்வாறு பூஜை செய்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்று ஐதீகம். இதனால், நேற்று காலையில் இருந்து ஆண்கள், பெண்கள் கச்சபேஸ்வரர் கோவில் அரச மரத்தடியில் உள்ள நாக சிலைக்கு பாலபிஷேகம் செய்து, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு வழிபட்டனர்.குழந்தை பேறு இல்லாத தம்பதியினர், மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டனர். மேலும் அரச மரத்தை, 108 முறை வலம் வந்து, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !