வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4434 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாரதனையும் நடந்தது. ருக்மணி சத்யபாமா சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருள்தரும் ஐயப்பன் கோவிலில் ஐயப் பனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ”வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.